×

அரங்கநாயகம், கே.வி.ஆனந்த், சோலி சோராப்ஜி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த  வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு  முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய அரங்கநாயகம் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து  வாடும் குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும்  அடைந்தேன். நிழற்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர். அயன்,  கோ, மாற்றான், கவண் உட்பட பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய சிறந்த படைப்பாளியான அவர், தேசிய விருது பெற்ற  பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.

மூத்த வழக்கறிஞரும், இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான சோலி சோராப்ஜி மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த  வருத்தமடைந்தேன். முன்னணி சட்ட வல்லுநர்களில் ஒருவராக விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்யவியலாதது. அவரது மறைவால் வாடும்  அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : K. CV ,Anand ,Chloe Sorapji Diocese ,Q. Stalin , Aranganayakam, KV Anand, Chloe Sorabjee's death: MK Stalin's condolences
× RELATED பூட்டை உடைத்து தனியார் நிறுவனத்தில் பணம், செல்போன் திருட்டு